கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
ஜனாதிபதி இந்த விஜயத்தை நேற்று (27.08.2026) மேற்கொண்டுள்ளார்.
மகாநாயக்க தேரர்களிடம் ஆசி
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பு மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றதுடன், சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மல்வத்து தரப்பு அனுநாயக திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி தரப்பு மகாநாயக்க வராகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரை சந்தித்து அவரது நலன் குறித்து விசாரித்ததுடன், அவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் ஹர்ச சுரங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
