இலங்கை இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானியாக (Chief of Staff) பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, இலங்கையின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியான ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரின் இடத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவின் நியமனம், இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
