'டிட்வா' சூறாவளி மீள்கட்டமைப்புக்கு இந்தியாவின் 350 மில்லியன் டொலர் கடன் உதவி!

Author
0
இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று (05) கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடினார்.
📌 இந்தச் சந்திப்பில்,
✅ இலங்கை – இந்திய இருதரப்பு உறவுகள்
✅ பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள்
✅ இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம்
ஆகியவை குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
💰 இதனைத் தொடர்ந்து, 'டிட்வா' சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்புக்காக, இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் (Line of Credit) ஒப்பந்தங்கள் இரு தரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
🏗️ இந்த நிதி,
• சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு
• உட்கட்டமைப்பு மேம்பாடு
• அவசர கொள்வனவு தேவைகள்
ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top