ஹர்ஷ டி சில்வாவின் தந்தையார் காலமானார்!

Author
0
தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பொதுப் நிர்வாகியுமான ஹரிஸ் டி சில்வா, தனது 93ஆவது வயதில் காலமானார்.
இவர், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் தந்தையார் ஆவார்.
அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றிய ஹரிஸ் டி சில்வா, இலங்கையின் பொதுப் நிர்வாகத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மூத்த நிர்வாக அதிகாரிகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
📍 இறுதி அஞ்சலி:
இல. 43/91, பூர்வாராம வீதி, கொழும்பு 05 இல் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
🕯️ இறுதிக்கிரியைகள்:
📅 நாளை (06)
🕠 மாலை 5.30 மணி
📍 கிருளப்பனை பொது மயானம்
🙏 அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top