பமுனுகம கடற்கரையில் சோகம்! 4 பேர் கடலில் காணாமல் போனதாக தகவல்!

Author
0

எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் 35 வயதுப் பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் என தெரியவந்துள்ளது.

முதல் இணைப்பு

கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.

பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணை

குறித்த நால்வரும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.      காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top