அம்பகஸ்தூவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு புதிய உத்தியோகபூர்வ இல்லம்!

Author
0
பண்டாரவளை பொலிஸ் பிரிவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அம்பகஸ்தூவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் புதிய உத்தியோகபூர்வ இல்லம் குறியீட்டு ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
💰 ஒவ்வொரு உத்தியோகபூர்வ இல்லத்தையும் நிர்மாணிக்க சுமார் ரூ.60 இலட்சம் செலவிடப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை பொலிஸ் பிரிவில் மேலும் 16 உத்தியோகபூர்வ இல்லங்களை நிர்மாணித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
🏠 இதனுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரம் 2க்கான உத்தியோகபூர்வ இல்லமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னதாக பதுளையில் இயங்கி வந்த ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியனவும் பண்டாரவளை பகுதியில் நிறுவப்பட்டுள்ளன.
🎯 இலங்கை பொலிஸாருக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு திறமையான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
📍 இதற்கு முன்னதாக தென் மற்றும் வட மாகாணங்களிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் தலைமையக பொலிஸ் பரிசோதகர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன.
🤝 இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பதுளை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top