இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்து! — ரூ.80 பில்லியன் ஒதுக்கீடு!

Author
0
🇱🇰 இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், மின்சார தொடருந்து சேவைத் திட்டத்திற்காக ரூ.80 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
📅 இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚉 திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் கொழும்பு மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
🌍 பின்னர் இந்தத் திட்டம் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
⚡️ மின்சார தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
🚆 இலங்கையின் தொடருந்து போக்குவரத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகுமா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top