இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 36 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த வீரர்கள் சிறப்பாக அணிவகுப்பில் கலந்துகொண்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடற்படைப் பணிக்கான தயார்நிலை இதன்போது கௌரவிக்கப்பட்டது.

பயிற்சியின் மூலம் பெற்ற திறன்களுடன் நாட்டின் கடற்பாதுகாப்பு பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட புதிய மரைன் வீரர்கள் தயாராகியுள்ளனர்.

நாட்டைப் பாதுகாக்கும் கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துகள்!