சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை பியுமி ஹன்சமாலி தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக பதிலளித்துள்ளார்.

“என்னை வீழ்த்துவது கடினம்; நான் கீழே விழுந்து எழுந்த பெண்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், தான் இலங்கையில் இல்லாத நிலையில், சில முகநூல் பக்கங்கள் தன்னைப் பயன்படுத்தி போலிச் செய்திகளைப் பரப்புவதை காலையில் எழுந்தபோது அறிந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஷிரான் பாசிக் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், துபாயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பத்ம என்பவரை மட்டுமே சந்தித்ததாகவும், அவருடன் எந்தவித பணப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பியுமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.

தான் உழைத்த பணம் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் மூலமே முன்னேறியதாகவும் கூறியுள்ள அவர், போதைப்பொருள் மற்றும் கருப்புப் பணம் தனக்குத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்” எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.