மூத்த இசைக்கலைஞரும் பாடகியுமான நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களும் தேசிய துக்க நாளாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மூன்று நாட்களிலும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கலைத்துறைக்கு நந்தா மாலினி ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை இலக்கம் 04/2026 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இசைத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய நந்தா மாலினிக்கு அஞ்சலி.