
இந்திய நடிகை அனன்யா ராஜ் தனது 27ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘7 Hours to Go’, ‘The Final Exit’, ‘Ghost’ மற்றும் ‘Thaggede Le’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஹிந்தி மற்றும் பிராந்தியத் திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் கவனம் பெற்றிருந்தார்.

குடும்பத்தினரின் தகவலின்படி, ஜூலை 15ஆம் திகதி உறக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுடன் அவர் போராடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனன்யா ராஜின் மறைவு இந்திய திரையுலகினரிடையிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.