கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கொலை வழக்கு: 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

Author
0
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📌 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.
⚖️ விசாரணைகளின் போது சாட்சியங்கள் மற்றும் சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் தொடர்பில் முன்னதாக நீதிமன்றத்தில் தகவல்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
🔴 குறித்த வழக்கில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top