மற்றுமொரு சிறைச்சாலையில் பதற்றம் – குருவிட்ட சிறைச்சாலையில் கண்ணீர்ப்புகை பிரயோகம்!

Author
0
📍 இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் அமைதியற்ற பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🗣 சிறைச்சாலைப் பேச்சாளர் தெரிவிக்கையில், நேற்று இரவு ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று காலை மீண்டும் கைதிகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
🏥 மேலும், கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை மருத்துவமனைக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
📢 நீதி மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சர் ஹர்ஷ
ன நானாயக்கார, குருவிட்ட சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top