'Sri Lanka AI Week 2026' உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Author
0
📅 செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் 04, 2026 வரை
🇱🇰 இலங்கையை செயற்கை நுண்ணறிவு (AI) மையமாக மாற்றும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக "Sri Lanka AI Week 2026" உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🚀 டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech Sri Lanka மற்றும் SLT-MOBITEL இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்கின்றன.
🎯 முக்கிய நோக்கங்கள்:
✅ இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துதல்
✅ AI ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல்
✅ இலங்கையை பிராந்திய AI மையமாக உருவாக்குதல்
🗣️ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நிகழ்வின் உத்தியோகபூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியதுடன், AI தீர்வுகளை உருவாக்கும் நாடாக இலங்கை மாற வேண்டும் என வலியுறுத்தினார்.
💡 "AI Amplified" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த வார நிகழ்வில்,
🌍 சர்வதேச AI மாநாடு
💻 தொழில்நுட்பக் கண்காட்சி
🏆 AI புத்தாக்கங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான விருது வழங்கும் விழா
ஆகிய மூன்று பிரதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
📈 மேலும், 5 பில்லியன் அமெரிக்க டொலர் தொழில்நுட்ப ஏற்றுமதி இலக்கை அடைவதற்காக AI, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திறன்களை வலுப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top