நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோர் மாயம்; சமூக வலைத்தளத்தில் கவலை!

Author
0
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் பாதிப்புகளுக்கு மத்தியில், கைலாஷ் மலைக்கு யாத்திரை சென்றதாகக் கூறப்படும் நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோரை தொடர்புகொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகையின் பெற்றோர்களான ரமேஷ் சர்மா (65) மற்றும் நீலம் சர்மா (64) ஆகிய இருவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என நிவேதா பெத்துராஜ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பெற்றோர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தன்னை தொடர்புகொள்ளுமாறு மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் சிலரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top