பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.
அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
