யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் நேற்று (20.08.2026) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவிழாவில் கலந்துகொண்ட 157 பேர் கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும் பலர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
