ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற லா டொமாட்டினா (La Tomatina) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர்.
வருடந்தோறும் நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவில், ஸ்பெயின் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொள்வது வழக்கம்.
தெருக்களில் திரண்ட மக்கள், ஒருவர்மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை வீசி மகிழ்ந்ததால், அப்பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது. 
களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த பிரமாண்ட நிகழ்வு, உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
