
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது, விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நேரடியாக மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல்

தொழில்நுட்பத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுடன் இணைத்தல்

தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கல்
ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.