
2030ஆம் ஆண்டின் இறுதிக்குள், 4 புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவடைந்ததன் மூலம், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் மேலும் 132 கிலோமீட்டர் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய திட்டங்கள்:

மத்திய அதிவேக நெடுஞ்சாலை
• மீரிகம – குருநாகல் (37 கி.மீ.)
• பொத்துஹர – கலகெதர (33 கி.மீ.)

தற்போது நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை (முதற்கட்டம்)
• குருநாகல் – கலேவெல (38 கி.மீ.)

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை
• 24 கிலோமீட்டர் நீளத்தில்

இந்த ஆண்டிலேயே பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுமார் ரூ. 233 பில்லியன் மதிப்பீட்டில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

மேலும், இந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முதல் முறையாக உள்ளூர் நிதி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.