
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலையைச் சூழவுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் பாதுகாப்பு தரப்பினர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலதிக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது தொடர்ந்து அறிவிக்கப்படும்.