ரஜினியின் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் 600 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்படுகிறது.‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் 350 கோடி ரூபா வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் , இப்படத்திலிருந்து ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன்... ஒன் சன்’என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறன்றன.
‘ஜெயிலர் 2’ படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜெயிலர் 2’ படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

