நாடளாவிய சோதனையில் 463 பேர் கைது!

Author
0

 நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 26,606 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

                            

இந்த சோதனைகளின்போது 463 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 12 பேரும், கட்டளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 360 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 165 பேரும் அடங்குவர். 

மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 324 சாரதிகளும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 119 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top