தியாக தீபம் திலீபனின் ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது
நினைவேந்தலின் ஆரம்பமாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்
தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்

