இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வந்த சிறுவனை எதிர்வரும் ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குறித்த சிறுவன் இலங்கையில் வசிக்கும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்கில் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
இந்நிலையில் சிறுவனை எதிர்வரும் ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

