நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறும் சகதியும் நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை உயிருடன் மீட்கும் நோக்கில், மலைப்பகுதியை வெடிவைத்து பாதை அமைத்தல் மற்றும் சுரங்கத்துக்குள் காற்றை செலுத்துதல் உள்ளிட்ட தீவிர மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 ஆகவும், காணாமல் போனோர் எண்ணிக்கை 3,925 ஆகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் பெருமளவானோர் வெளிநாட்டவர்களாக உள்ள நிலையில், நீர்மின் நிலையங்களில் இருந்து இதுவரை 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.

நேபாளம் மற்றும் சீன இராணுவத்தின் ஒருங்கிணைப்பில், இந்தியா, தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலிய நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

சுரங்கத்துக்குள் பிராணவாயு இருப்பதால், தங்களது உறவினர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

இதுவரை 11,379 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் 11 நீர்மின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பு.