கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Author
0

 தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்புகளுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


கொழும்பு மாவட்டத்தின் சீத்தாவக்கை பிரதேச செயலகப் பிரிவுக்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட புலத்சிங்கள பேருவளை இங்கிரிய மதுகம பாலிந்தனுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எனவே மலைப்பாங்கான பகுதிகள் சரிவுப் பகுதிகள் மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நிலைமை மோசமடைந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top