ஹங்கேரி - புடாபெஸ்ட்டில் நடைபெற்ற தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பதிரகே இன்று காலை நாட்டிற்கு வந்தடைந்தார்
இந்தநிலையில் வானூர்தி பயணத்தின்போது அவருடைய நான்கு ஈட்டிகள் உடைந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவற்றின் மதிப்பு ரூ மில்லியனுக்கும் அதிகம் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்
இந்தச் சம்பவம் குறித்து அவர் தற்போது வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது