யாழில் விபத்து! உயிரிழந்த இளம் பொலிஸ் உத்தியோகஸ்தர்

Author
0

 யாழ்ப்பாணம் கேர தீவு சங்குப்பிடி பாலத்திற்கு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரை சேர்ந்த 31வயதுடைய ஆர்னோல்ட் அன்ரனி  என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பயணித்த போது, மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top