ஒரே நாளில் அடுத்தடுத்து விபத்துகள்! இரு உயிர்கள் பறிபோன சோகம்

Author
0

 அனுராதபுரம், நொச்சியாகம – குகுல்கடுவ வீதியின் 2ஆம் கல் தொலைவுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குகுல்கடுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாலத்தின் தூணில் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.


நேற்றுமுன்தினம்(27) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதியும் பின்னால் பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றிச் சாரதி நேற்றுப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் எனள அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, காலி – கொழும்பு பிரதான வீதியின் வாதுவ - பொத்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


காலி பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் ஒன்றுடனும் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று(28) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக மீட்கப்பட்டுப் பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் வஸ்கடுவை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top