வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா..! பொலிஸாரின் அதிரடி எச்சரிக்கை

Author
0

வீடுகள், வர்த்தக நிலையங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை வாடகைக்கு வழங்குவதற்கு முன்னர், வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை முறையாக ஆராய்ந்து உரிமையாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த,

வாடகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில் இருந்து போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய பொருட்கள் அடிக்கடி கைப்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


சில சொத்து உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் பின்னணி தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாமல் தமது சொத்துக்களை வாடகைக்கு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாடகைக்கு வழங்கப்பட்ட சொத்தில் குற்றச் செயல் இடம்பெறும் சந்தர்ப்பங்களில், சம்பவத்தின் தன்மை மற்றும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாக சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும், தமது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தமது பகுதிக்கு புதிதாக வந்து தங்கியுள்ள அறிமுகமற்ற நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றி வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் நோக்கம் பொதுமக்களைப் பாதுகாப்பதுடன், இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களின் புழக்கத்தைக் குறைப்பதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top