பண்டாரவளையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!

Author
0

 பண்டாரவளை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பண்டாரவளை வலய குற்றப் விசாரணைப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர். 


கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


மடுல்சீமைப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கொழும்பில் இருந்து ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு வந்து பண்டாரவளை நகரில் விற்பனை செய்துவந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைதான நபரிடமிருந்து 11 கிராமும் 500 மில்லிகிராமும் நிறை கொண்ட ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (27) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பண்டாரவளை வலய குற்ற விசாரணைப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top