இதயத்தில் சிக்கிய துணி தைக்கும் ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!

Author
0
சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற  வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

மருத்துவப் பரிசோதனைகளின்போது குறித்த நபரின் இதயத்தில் துணி தைக்கும் ஊசி ஒன்று சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது

மேலும் அவரது வயிற்றுப் பகுதியிலும் பல ஊசிகள் குத்திய நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்


எனினும் இதயத்தில் ஊசி சிக்கியிருந்த போதிலும் அவரது இதயம் எவ்வித பாதிப்புமின்றி இயல்பாகச் செயல்பட்டு வந்துள்ளது

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இதயத்தில் சிக்கியிருந்த ஊசியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்

இதயத்தில் ஊசி சிக்கியிருந்தும், இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படாதது மருத்துவ ரீதியில் மிகவும் அரிதான சம்பவம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top