கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு – பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!

Author
0
கொழும்பு – கொள்ளுப்பிட்டி 6ஆம் ஒழுங்கை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
🕒 அதிகாலை சுமார் 3 மணியளவில், அப்பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
🔫 தொடர்மாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
🏥 துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
👮‍♂️ இந்த துப்பாக்கிச்சூடு தனிப்பட்ட காரணத்திற்காக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
🚔 சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
🔎 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top