
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
79 இலட்சம் ரூபாய் பெறுமதியான கதிரைகள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், உரிய திறந்த கொள்முதல் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விசாரணைகளின் பின்னணியில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விசாரணைக்காக முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகனும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனுடன் தொடர்புடையதாக அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.