இதனால்தான் தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டது! அரச தரப்பிலிருந்து வெளியான விளக்கம்

Author
0

 யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில், திலீபன் என்றும் அறியப்படும் ராசையா பார்த்திபனின் சிலை, அகற்றப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெயதிஸ்ஸ, பொலிஸார் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவித்துள்ளதாகவும், சட்டப்பிரிவு தொடர்பாகவும் ஒரு வழக்கு விவாதிக்கப்பட்டு வருகின்றது.


வடக்கில் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக செப்டம்பர் மாதத்தில் அவரது படத்தைப் பயன்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும், சிலை வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆண்டு நிறுவப்பட்ட சிலையை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பு. நமது நாட்டின் சட்டங்கள், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை, அதன் கொடிகள், சின்னம் போன்றவை உட்பட, ஊக்குவிப்பதை அனுமதிப்பதில்லை.


இதுபோன்ற செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலையை அகற்றுவதற்கு முன்பு பொலிஸார் நீதிமன்றத்திற்கு இது தொடர்பான விடயங்களை தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது எனவே இதுவே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

நாட்டில் அவ்வப்போது இனப் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் அரசாங்கம் அத்தகைய செயல்களைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள திலீபன் நினைவிடத்தில், திலீபன் என்றும் அறியப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ராசையா பார்த்திபனின் சிலை அகற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

திலீபனின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு அந்த இடத்தில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த மறுநாள், ஞாயிற்றுக்கிழமை (27) அன்று பொலிஸாரால்  திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டது.

இந்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, திலீபன் 1987 செப்டம்பரில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top