PickMe செயலியின் வாடகை முச்சக்கர வண்டிச் சாரதி போல் நடித்து, நாவலப்பிட்டி, கினிகத்தேனை, கம்பளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களை விநியோகித்து வந்த 38 வயதுடைய பிரதான சந்தேகநபரும், அவரது 27 வயது உதவியாளரும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'யக்கல நாமல்' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைப் பெற்று பல பகுதிகளுக்கு விநியோகித்து வருவதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது
இதன்போது நாவலப்பிட்டி ஜயசுந்தர வீதியில் அமைந்துள்ள பிரதான சந்தேகநபரின் வீட்டைப் பொலிஸார் சோதனையிட்டபோது, அங்கிருந்த 2,450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

