தரமற்ற நிலக்கரி பயன்பாடு மற்றும் அவசரகால நிலக்கரி கொள்முதல் காரணமாக அரசாங்கத்திற்கு ரூ. 18,368 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாட்டுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு நடத்திய விசாரணையின் பொழுது, அரசாங்கத்திற்கு ரூ. 18,368 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாட்டுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு நடத்திய விசாரணையின் பொழுது, அரசாங்கத்திற்கு ரூ. 18,368 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தரமற்ற நிலக்கரியின் அதிகப்படியான பயன்பாட்டினால் ரூ. 7,099 மில்லியன் இழப்பும், கூடுதல் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ. 80.4 மில்லியன் கூடுதல் செலவும், கூடுதல் சாம்பல் போக்குவரத்திற்காக ரூ. 13.1 மில்லியன் கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளன.
மேலும், ரூ. 300 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பு காரணமாக, மாற்று மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய 8,572 மில்லியன் செலவிடப்பட்டது. மேலும், ஐந்து நிலக்கரி கப்பல்களை அவசரமாகக் கொள்முதல் செய்ததால் 2,284 மில்லியன் ரூபாயும், அவசர கொள்முதல் கப்பல் தாமதமானதால் 402.8 மில்லியன் ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளன.
இருப்பினும், உலக சந்தையில் டீசல் விலை உயர்வு காரணமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 100 ரூபாய் மானியமும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இழப்பும் இந்தக் கணக்கீடுகளில் சேர்க்கப்படவில்லை.
அந்தச் செலவுகளையும் இழப்புகளையும் கணக்கிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய, இதுவரை கண்டறியப்பட்ட மொத்த இழப்பு 18,368.89 மில்லியன் ரூபாய் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


