பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 5 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

Author
0

 Jailer 2 Tamilnadu Collection: ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்தால் பிளாக்பஸ்டர்தான் என்பது போல் ஜெயிலரின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2-வும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.


உலகளவில் இதுவரை இப்படம் 5 நாட்களில் ரூ. 475 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இப்படத்தின் இறுதி வசூல் ரூ. 800 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ரூ. 1000 கோடி வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நான்கு வாரத்தில் ஓடிடி ரிலீஸ், வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜெயிலர் 2 வெளியாகாதது போன்ற காரணங்களால் ரூ. 1000 கோடி என்பது சற்று கடினம் என்கின்றனர்.


ரூ. 1000 கோடி வசூல் என்பது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், 5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top