5 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு! 3 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை - உரிமையாளர் குற்றச்சாட்டு

Author
0

 நுவரெலியா - தலவாக்கலை பகுதியில் 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாகவும், திருடும் காட்சிகள் சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பாதுகாப்பு கேமரா கட்டமைப்புகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்தப் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா கட்டமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என கடையின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, பாதுகாப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ள சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தாலோ அல்லது அவரை அடையாளம் காண முடிந்தாலோ, உடனடியாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top