ஹட்டன் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து - சாரதி வைத்தியசாலையில் அனுமதி

Author
0

 ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(27.10.2026) இடம்பெற்றுள்ளது.


நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top