யாழ்.இணுவில் சந்தியில் விபத்து - 67 வயதுடைய முதியவர் பலி

Author
0

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, இணுவில் சந்தியில் இன்று(22.10.2026) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்த விபத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிங்கம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top