இலங்கை ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி

Author
0

நடப்பு ஆண்டில் இலங்கையின் ஆடை உற்பத்திகள் ஏற்றுமதித் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் ஆடை உற்பத்தி ஏற்றுமதி மூலமாக 3108.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே வருமானமாக ஈட்டியுள்ளது.


எனினும் அதற்கு முந்திய 2015ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் 3318.1 மில்லியன் டொலர் வருமானம் ஆடை உற்பத்திகள் ஏற்றுமதி மூலமாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

அதனடிப்படையில் முந்தைய ஆண்டின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆடை உற்பத்திகள் ஏற்றுமதி மூலமான வருமானம் 6.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் வருமானம் 7.4வீதம் அளவில் வீழ்ச்சியுற்றிருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top