வாஸ் கவிதை" தொடர்பாக தெமட்டகொட பொலிஸாரால் எந்தவொரு இளைஞரிடமும் விசாரணை நடத்தப்படவோ அல்லது வாக்குமூலம் பதிவு செய்யப்படவோ இல்லை என்று பொலிஸ் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்பதைப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெமட்டகொட பொலிஸ் நிலையத்திடம் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,
வாஸ் கவிதை தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு எந்த முறைப்பாடும் வரவில்லை என்றும், அது தொடர்பாக எந்தவொரு நபரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.
தெமட்டகொட பொலிஸ் நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, உண்மைத்தன்மையற்ற ஒரு பொய்யான அறிக்கை என பொலிஸ் மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
இந்தப் பொய்யான அறிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிக்காட்சி குறித்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கின்றது.

