கலா ​​ஓயாவின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

Author
0

 கலா ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, ஆற்றில் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையை நெருங்கி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராஜங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளிலும் அதன் தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, தற்போது வினாடிக்கு 13,200 கன அடிக்கும் அதிகமான வேகத்தில் கலா ஓயாவுக்கு நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது.

நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைக் கொண்டு, எதிர்வரும் நேரங்களில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடமும், அப்பகுதியினூடாக பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளிடமும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.


                   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top