ஹட்டன் பன்மூர் குளத்திலிருந்து 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரின் சடலம் இன்று(22.10.2026) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் குளத்தில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹட்டன் வனராஜா தோட்டத்தைச் சேர்ந்தவர் 58 வயதுடையவர் என்றும், இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கடந்த சில காலமாகப் பெட்டிக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவருகிறது.
குளக்கரையிலிருந்து உயிரிழந்தவரின் பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாதணிகள், பணப்பை, குடை ஆகியன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

