ஜெயிலர் 2 உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா போல் ஜெயிலர் 2 பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.
இப்படம் தமிழகம் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் 2 இலங்கையில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இலங்கை பொறுத்தவரை எப்போதும் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும்; அதிலும் ரஜினி, விஜய் படங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், தற்போது இலங்கையில் ஜெயிலர் 2 ஒரு வாரம் ஓடிய நிலையில் இந்திய மதிப்பில் ரூ. 5.5 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

