காலி - தலல்ல கடற்கரை பகுதியில் மர்ம பொதிகள் சிலவற்றை கண்டுபிடித்ததாக தெரிவிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டுச் தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து இந்தச் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட மூட்டைகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

