கோதுமை மா விலை உயர்வு : அனுமதி பெறவில்லை என அதிகார சபை தெரிவிப்பு!

Author
0

இலங்கையில், கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 13 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளமை ஊடகங்கள் மூலமாகவே நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரியவந்துள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவையும் இதுபற்றி தங்களுக்கு முன்னதாக அறிவிக்கவோ அல்லது முறையான அனுமதியைப் பெறவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபைத் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விலை அதிகரிப்புக்கான காரணங்கள் மற்றும் எந்தெந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை வழங்குமாறு கோரி, கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


நுகர்வோர் விவகார சட்டம் ஒழுங்குவிதிகளின்படி கோதுமை மா ஒரு குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருளாகக் கருதப்படுவதால், விலை திருத்தத்திற்கு முன்னர் அதிகார சபையுடன் கலந்தாலோசித்து உடன்படிக்கைக்கு வர வேண்டும்.

எந்தவித அனுமதியும் இன்றி விற்கப்படுவதால், கூடிய விலைக்கு மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அதிரடிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பதில்களைப் பொறுத்து, தகுந்த சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top