பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து ஒன்று இன்று காலை தடம் புரண்டுள்ளது.
இன்று(05.10.2026) அதிகாலை 4.40 மணியளவில் கங்கொட மற்றும் கடிகமுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தமை காரணமாகவே தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தொடருந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இதன் காரணமாக குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் அனைத்து தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த உடுகர தொடருந்து பாதை புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இயக்கப்பட்ட முதலாவது அலுவலக தொடருந்து இதுவாகும்.
தடம் புரண்டமையினால் ரயிலின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொடருந்து சாரதி டி.ஏ.பி. செந்தநாயக்க, மண் மேட்டிலும் பாறையிலும் தொடருந்து மோதியதாக குறிப்பிட்டுள்ளார்.
“மண் மேடொன்று பாதைக்கு குறுக்காக விழுந்திருந்தது. அந்த மண் மேட்டை நாங்கள் காணும் போது 10 மீட்டர் தூரம் கூட இருக்காது. மண் மேட்டில் மோதி தொடருந்து தூக்கி வீசப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

